ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 24வது நினைவஞ்சலி நிகழ்வு

அஞ்சலி நிகழ்வுக்கு அழைப்பு

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தனது முதலாவது தலை முறைத் தலைமைகளை தெற்கின் இன வெறிக்கு இரை கொடுத்தது. ரெலோ தனது இரண்டாவது தலை முறைத் தலைமையையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் வடக்கின் பயங்கரவாதத்திற்கு காவு கொடுத்தது. இன்று, எமது மனங்களில் என்றும் அழியாத சிறீயண்ணாவையும் மற்றும் போராளிகளையும் புலிகளின் பாசிச அரசியலில் முதற்காலடி நர வேட்டை ஆடிய 24 வது வருட நினைவேந்தும் நாள்.

1986 ஏப்ரல் 26ல் புலிகள் ரெலோ மீது பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை தொடுத்தார்கள். பத்து நாட்கள் நீடித்த பாசிசத்தின் முதற் பயிற்சிப் பட்டறை நூற்றுக்கணக்கான ரெலோ போராளிகளையும் சில பொது மக்களையும் பலியெடுத்து, மே 6ம் நாள் எமது தலைவர் சிறீ சபாரட்னம் கொலையுடன் முடிவுக்கு வந்தது.

மறைந்த எமது தலைவர் சிறீ சபாரட்னம் ஏனைய போராளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நினைவேந்தும் இந்நாளில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் பங்கு பெறும் மாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

(இவ்வருட வீரமைந்தர் தினத்தை வரும் சனிக்கிழமை 2010, மே. 8ம் திகதி Mark platz 9, 2540 Grenchen, Switzerlandஇல் நினைவேந்த உள்ளோம். அந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

வீரமைந்தர் தினம்

காலம் : 08 மே, 2010, சனிக்கிழமை

காலை 10 மணிக்கு

இடம் : Mark platz- 9                                                   
2540-Grenchen                                                               
Switzerland                                                                     

பாண்டி:சுவிஸ்:0041789051095                                                                

அமீன் : சுவிஸ்: 0041783000373
செல்வா:சுவிஸ்:0041763674141                                         சேகர்: சுவிஸ்: 0041783057684
தர்மு: சுவிஸ்: 0041795447406
நேசன் :சுவிஸ் :0041783075224
E-Mail:telo.org@gmail.com

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply