வன்னிக்கு தற்காலிக கூடாரங்கள் எடுத்துச் செல்ல தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இலட்சினைகள் பொறிக்கப்பட்ட தற்காலிக கூடாரங்கள் வன்னிக்கு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், மனிதநேய முகவர் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக தற்காலிக கூடாரங்களை ஏற்றியபடி ஐந்து லொறிகள் வவுனியாவில் தரித்து நிற்பதாகத் தெரிவித்திருக்கும் மனித நேய அமைப்புக்களுக்கிடையிலான ஆணைக்குழு, மனிதநேய அமைப்புக்களின் இலட்சினைகள் பொறிக்கப்பட்ட தற்காலிக கூடாரங்கள் வன்னிக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படாது என அத்தியாவசிய சேவைகள் ஆணைக்குழு கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வன்னியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதெற்கென தற்காலிக கூடாரங்களை ஏற்றிய வாகனங்கள் நேற்று வன்னிநோக்கிப் புறப்பட ஏற்பாடாகியிருந்ததாகவும் மனிதநேய அமைப்புக்களுக்கிடையிலான ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
50,000 தார் பாய்கள், தற்காலிக கூடாரங்கள், மலசலகூடத்துக்கான பொருள்கள் தேவைப்படுவதாகவும், 65,000 குடும்பங்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருக்கும் அரசாங்க அதிகாரிகள் கூறுவதாக மனிதநேய மனிதநேய அமைப்புக்களுக்கிடையிலான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வாகனங்கள் கூட மதவாச்சி சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதல்கள் மற்றும் மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருந்து மற்றும் சுகாதார உதவிகளை வழங்குவதற்கு யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பு முன்வந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களுக்கிடையிலான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply