கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீள இயங்கவுள்ளது

30 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. உயர் நீதிமன்ற நீதவான் ஜே.விஸ்வநாதன் தலைமையில் நீதிமன்ற திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட நீதவானாக பி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply