மன்னாரிலிருந்து கொழும்பிற்கான போக்கு வரத்து சேவை மீண்டும் ஆரம்பம்
மன்னார் மற்றும் கொழும்பிற்கான இருவழி அரச பேருந்து சேவைகள் மீண்டும் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் நிலவி வந்த யுத்தநிலை மற்றும் மதவாச்சி சோதனைச்சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்ட பின் மன்னாரிலிருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கான போக்கு வரத்துக்கள் சுமுகமாக இடம் பெற்றுவருகின்றன.
ஆயினும் கடந்த ஓரிரு மாதங்களாக மன்னாரிலிருந்து கொழும்பிற்கான இரவு நேர அரச போக்கு வரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்நிருந்தன. இந்நிலையில் மீண்டும் கொழும்பிற்கான இரவு நேர போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை போக்கு வரத்து சபையின் மன்னார் சாலைக்குச்சொந்தமான பேருந்துகளே தற்போது மீண்டும் தமது சேவையை முன்னெடுத்திருக்கின்றது. இந்நிiயில் மாலை 7.45 மணிக்கு தலைமன்னார் பகுதியிலிருந்து புறப்படும் பேருந்து பேசாலை, கரிசல், புதுக்குடியிருப்பு கிராமங்கள் ஊடாக எருக்கலம்பிட்டியை அடைந்நு பின் அங்கிருந்து தாராபுரம், தாழ்வுபாடு, கீரி பிரதான வீதியூடாக மன்னார் நகரை வந்தடையும்.
இவ்வாறு வந்தடையும் அரச பேருந்து மன்னார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு முருங்கன், மதவாச்சி, புத்தளம் ஊடாக மறுநாள் காலை கொழும்பை சென்றடையும்.
இதே போன்று கொழும்பு அரச பேரூந்து வளாகத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பேரூந்து மறுநாள் அதிகாலை மன்னார் நகரை வந்தடைகின்றது.மன்னார் கொழும்பிற்கான ஒரு வழிப்பயணத்திற்கான கட்டணமாக அரச பேருந்து சேவை 320 ரூபாவினை அறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க யுத்தம் முடிவடைந்த பின்னர் மன்னாரில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் 24 மணித்தியாலங்களும் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் பேரூந்து தரிப்பிட வழாகம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கிய நிலையிலேயே காட்சியளிக்கின்றது.
இந்நிலையில் பொது மலசலகூட வசதிகள் மன்னாரில் போதுமானதாக இல்லாத நிலையில் இரவு நேரங்களில் பிரயாணங்களுக்காக வரும் பயணிகளில் ஆண், பெண்கள் ஒரு மலசல கூடத்தையே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply