மன்னாரில் அமைச்சர் ரிஷாடடின் நன்றி தெரிவிப்பும் மக்களின் பாராட்டும்

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைச்சசர் றிஷாட் பதியூதினுக்கு மகத்தான வரவேட்புக்கள் இடம்பெற்று வருகின்றது. நடந்து முடிந்த ஏழாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அவர்கள் அதி கூடியவாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கின்றார். இந்நிலையில் தமது வெற்றிக்காக உழைத்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அமைச்சர் அவர்கள் மூன்று நாட்களை உள்ளடக்கிய விஜய மொன்றை மன்னாரிற்கு மேற்கொண்டுள்ளார்.

வட புலத்தில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள இரு அமைச்சர்களில் ஒருவராக கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்கள் தெரிவாகியிருக்கும் நிலையில் மன்னார் வாழ் மக்கள் அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளும் நேற்று முன்தினம் தொடக்கம் மன்னார் மாவட்டம் எங்கும் இடம் பெற்று வருகின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன்; தற்போதைய புதிய அமைச்சரவையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்கான அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்  பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளுக்கும் அமைச்சர் அவர்கள் தமது நன்றியினை தெரிவிக்கும் பொருட்டு அண்மையில்; விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார். இதன் போது தட்சணா மருதமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள்  பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை கையளித்திருக்கின்றார்.

இந்நிகழ்வின் போது மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஹீனைஸ், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும்  கலந்து கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து ஏனைய தினங்களில் மன்னார், முசலி, நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பலகிராமங்களிலும் அமைச்சர் அவர்கள் தமது நன்றியினை தெரிவித்து வருகின்றார்.;

இது இவ்வாரிருக்க ‘மகிந்த சிந்தனை’யின் தேசிய வேலைத்திட்டத்திற்கேற்ப  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனைக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ‘பள்ளிமுனை 50 வீட்டுத் திட்டம்’ நேற்று மாலை (09.05.2010); திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது..

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், ‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடகளை வீடமைப்பு நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்திரக்கின்றார். இதில் அரச உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply