எரிந்து கொண்டிருந்த சரத் பொன்சேகாவின் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்த தமிழகப் பொலிசார்

தமிமிழக அரசியல் தலைவர்களை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோமாளிகள் எனத் குறிப்பிட்டதைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சரத் பொன்சேகாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உருவ பொம்மையை எரித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த தமிழகக் காவல் படையினர் அதற்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply