நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை
நாடு கடந்த அரசு அமைப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு புலிகளால் நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டு தெரிவான 272பேரும் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடாத்தப்பட்ட தேர்தலில் மேற்படி 272பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந் நாடுகடந்த தமிழீழ அரசை ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ள அரசு, இவர்கள் குறித்த விபரங்களை புலனாய்வு பிரிவினர் சேகரித்துள்ளதாகவும், இலங்கைக்குள் வருவதற்கு தெரிவு செய்யப்பட்ட எவரும் அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply