நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கைகொடுக்க வேண்டும்: ஜனாதிபதி

வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் ஜனாதிபதி உரை; நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிப்பு. இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கைகொடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். கடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானி கர்கள் இராஜதந்திரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தனதுரையில், மேலும் தெரிவித்ததாவது, உங்களில் பலர் நீண்ட காலமாக இலங்கையில் சேவை செய்தவர்கள். இதற்கு முன் நான் உங்களை நாட்டில் பாரிய பகுதியொன்று புலிகளின் அதிகாரத்திலிருந்த போதே சந்தித்திருக்கிறேன்.

அன்று போலவே இன்றும் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை எமது அரசாங்கம் மதிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேறு வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே சகல இன மக்களுக்கும் அச்சுறுத்தலாக விருந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது. புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நாம் பல முறை முயற்சித்துள்ளோம். நான் முதல் தடவை ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

ஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். அதற்காக நாம் உயர் மட்டப் பிரதிநிதிகளை அனுப்பினோம். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. உலகில் மிக மோசமான பயங்கரவாதக் குழுவுடன் நாம்யுத்தம் புரிந்த போதும் நாம் முழுமையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக செயற்பட்டதைப் பெருமையுடன் கூற முடியும்.

புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்த 2,60,000 மக்களில் 70 வீதமானோரை நாம் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியமர்த் தியுள்ளோம். அவசரக் கால சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம். அதில் பல சரத்துக்களை நீக்கியுள்ளோம். இதனை மிகவும் கவனமாகவே மேற்கொண்டோம். புலிகளின் ஆயுதங்கள் இப்போதும் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நாடு கடந்த அரசசொன்றை நிறுவுவதற்காக புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான தேர்தலொன்றை நடத்தவும் முயற்சித்தனர்.

இது போன்று வெளிநாடுகளில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவசரகால சட்டத்தை மேலும் தொடர முடிவெடுத்தோம். பயங்கரவாதத்தினால் பல உலக நாடுகள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளமையை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கான மக்கள் இதனால் இடம்பெயரவும் நேர்ந்துள்ளது. இதனால் எமது தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

முரண்பாடான தவறான கருத்துக்கள், பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலங்கை மீண்டும் முகங்கொடுக்க நேரிடுமோ என்பதில் அரசாங்கம் மிக கவனமாகச் செயற்படுகிறது. அதனால் நாட்டின் பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

நான் இது சம்பந்தமாக வெளிநாட்டுத் தூதுவர்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனைக் கருத்திற் கொண்டு நீங்கள் உங்கள் நாடு களில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது விடயத்தில் தூதுவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியதன்

முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்து கிறேன். பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற போதும் அரசாங்கத்துடனும் வெளிநாட்டமைச்சுடனும் தொடர்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி எமது நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேலும் பலப்படுத்த தூதுவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நாம் எமது கலாசாரம் மரபுரிமைகளுடன் கட்டுப்பட்டவர்கள். அதற்கிணங்கவே நாம் தீர்மானங்களை மேற்கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையுடனும் நாம் இத்தகைய விதமாகவே நட்புறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் போன்றே மதங்களுக்கிடையிலான நட்பு றவில் இலங்கை முன்னுதாரணமாக வுள்ளது. அதனால்தான் எத்தகைய பிரச்சினை வந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அத னைத் தீர்க்க முடிகின்றது. இதனால் மனித உரிமை மற்றும் இன நல்லுறவு தொடர்பில் ஆழமான உணர்வுண்டு.

தேசிய நல்லுறவில் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் கவனமெடுத்துள்ளது. அதற்காக மீளிணக்க ஆணைக் குழுவொன்றை விரைவில் நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மூன்று தசாப்த காலங்கள் தந்த துயரங் களை எதிர்கால சந்ததியும் சந்திப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது. 2002ம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை அதன் வீழ்ச்சி முதல் 2009 மே மாதம் இடம்பெற்ற நெருக்கடி நிலைமை வரை ஆராய்வதற்கு இவ்வாணைக் குழுவுக்கு உரிமையுண்டு. இந்த ஆணைக்குழுவில் அங்கம் வசிப்போர். நாட்டின் கெளரவத்தையும் சுயாதீனத்தையும் நம்பகத் தன்மையையும் பாதுகாக்கும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் என்பது எனது நம்பிக்கை.

இதேவேளை விரைவில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இதேவேளை எமக்கு மிகவும் இக்கட் டான சூழ்நிலை ஏற்பட்ட போது சர்வ தேச சமூகம் எம்முடன் சேர்ந்திருந்ததை கூறியாக வேண்டும். அதே போன்று சர்வதேச நாணய நிதியம் எமது அபிவிருத்தி நட வடிக்கைகளில் திருத்தி தரும் வகையில் பங்களிப்பு செய்ததையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும். உலகளாவிய பிணைப்பை போன்றே ஸ்திரம் எமது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என நாம் நம்புகிறோம். அதற்கேற்ப ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட்ட பல்தரப்பு மேடைகளில் எமது பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்தும் பேணவிரும்புகிறோம்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச் சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர் தன, பாதுகாப்புச் செயலாளர் கோதா பய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply