துணிவோடு எடுத்த தீர்மானங்களால் நாடு அபிவிருத்தி கண்டு வருகிறது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுகிறோம் – ஜனாதிபதி
நாடு, நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது பதவியிலேயே குறியாயிருந்து உரிய காலத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கத் துணிவில்லாத தலைவர்களினால் தான் நாடு சீரழிய நேர்ந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாம் அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு துணிவோடு எடுத்த தீர்மானங்களினால் நாடு இன்று அபிவிருத்தி கண்டு வருகின்றதெனவும் தெரிவித்த ஜனாதிபதி , ஜனநாயகத் திற்கு எதிரானவர்களென நீதிபதிகளைச் சாடியவர்களே இன்று ஜனநாயகம் கோரி நீதிமன்றத்திற்குச் செல் கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க நினைக்கும் இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடை யில் பெரிய வித்தியாசமெதுவுமில்லையெனவும் ஜனா திபதி தெரிவித்தார்.
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, பெருமளவிலான அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் பாரிய மின் அபிவிருத்தித் திட்டமொன்று கெரவலப்பிட்டியில் ஆரம்பித்து வைப்பதானது நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடியதொரு விடயமாகும்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றோம்.
நாட்டின் ஒரு பாதி பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டி ருந்த காலகட்டம் அது. புலிகளின் அனுமதியின்றி அங்கு எவரும் போகமுடியாது. எமது படையினரோ பொலி ஸாரோ கூட அப்பகுதிக்குள் போகமுடியாது. ஆனால் அவர்கள் இப்பகுதிக்கு வந்து போகலாம் என்ற நிலை நடைமுறையிலிருந்தது.
நாட்டின் பிரதமர், தலைவர்கள் மடுமாதா வணக்கஸ் தலத்துக்குப் போவதென்றாலும் புலிகளின் அனுமதி யையே பெறவேண்டியிருந்தது. இந்த நிலைமை இன்று முழுதுமாக மாற்றியுள்ளோம்.
இதற்குக் காரணம், அன்று துணிச்சலுடன் தீர்மானமெ டுக்கும் திராணி தலைவர்களிடம் இல்லாமையே, பயங்கரவாதத்தை ஒழிப்பதாயிருக்கட்டும், நுரைச்சோலை – மேல் கொத்மலை மின் திட்டங்களை தொடங்குவதாயி ருக்கட்டும் தமது பதவி பறிபோகும், மக்கள் தம்மை ஒதுக்கிவிடுவார்கள் என நாட்டுத் தலைவர்கள் நினைத் தார்களேயொழிய நாட்டின் எதிர்காலம் மக்களின நலன் களைப் பற்றி அவர்கள் அக்கறை கொண்டதில்லை. இவ் வாறு சிந்திப்பவர்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒருபோதும் இயலாது.
இதனால்தான் நுரைச்சோலை மின் உற்பத்தித் திட்டம் 20 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டதுடன் மேல் கொத் மலைத் திட்டமும் 15 வருடங்களாக முன்னெடுக்கப்படா மலிருந்தது. மக்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாராளுமன்றப் பதவிகளைக் காக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகவிருந்தது.
இதுபோன்று எம்மால் செயல்பட முடியாது. நாம் நாடு, நாட்டின் நலன், எதிர்காலப் பரம்பரையின் நலன்க ளைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை மேற்கொள் கின்றோம். பதவிக்காக அல்ல, நாட்டுக்காகவே தீர்மா னங்கள் எடுக்கப்படுகின்றன. அதனால் தான் பல முக்கியமான தீர்மானங்களைத் தயக்கமின்றி துணிச்சலுடன் எம்மால் எடுக்க முடிந்தது.
கடந்த கால அரசாங்கங்கள் புலிகளை அபிவிருத்தி செய் ததேயன்றி நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. இன் றும் அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை தம் மடியில் வைத் துக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். வடக்கில் பயங் கரவாதிகளும் இத்தகையோரே ஆட்சியிலிருக்க வேண்டு மென்று விரும்புகின்றனர். நாட்டைப் பிரித்துக்கொடுக்கும் ஆட்சியாளர்களையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிட இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்காக நீதிமன்றம் செல்கின்றனர். அன்று நீதிமன்றத்துக்கு கல்லெறிந்தவர்கள் நீதிபதிகளை சாடியவர்கள் இன்று ஜனநாயகம் கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். நீதிபதிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகொண்டு வந்தவர்கள் இன்று அவர்களின் புகழ்பாடித்திரிகின்றனர்.
நாம் ஒருபோதும் அப்படிச் செயற்படமாட்டோம். எமக்கு எதிரான தீர்ப்புக்களை வழங்கியபோதும் நாம் நீதிமன்றத்திற்குக் கெளரவமளிக்கத் தவறமாட்டோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply