பிரிட்டனின் புதிய பிரதமராக டேவிட் கெமரோன் : மகாராணி அறிவிப்பு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக டேவிட் கெமரோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என பிரிட்டிஷ் மகாராணி அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் பதவி விலகியதையடுத்து இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் 200 வருட அரசியல் வரலாற்றில், 43 வயதான டேவிட் கெமரோன் மிக இளமையான பிரதமர் எனக் கூறப்படுகிறது.

லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில், அதன் தலைவர் நிக் ளெக் பிரதி பிரதமராகப் பொறுப்பேற்பார். பிரிட்டனில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டுக் கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்தது. அதன் பின்னர் இப்போது கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் ஆளும் தொழிற்கட்சியைவிட அதிகப்படியான வாக்குகளை டேவிட் கெமரோனின் கன்சர்வேடிவ் கட்சி பெற்றிருந்ததையடுத்தே தாம் இக்கட்சியுடன் இணைந்ததாக நிக் ளெக் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply