புலிகளிற்கு நிதி சேகரித்த குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் கனேடிய புலி உறுப்பினர்

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக கனடாவில் நிதிசேகரித்த பிரபாகரன் தம்பித்துரை என்ற புலிகளின் கனேடிய செயற்பாட்டாளர் தனது குற்றத்தை நீதிமன்றில் ஒப்புகொண்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் மேபிள் சிற்றியில் வசித்துவந்த பிரபாகரன் தம்பித்துரை என்பவர் கனடாவின் பிறிதொரு மாநிலமான வன்கூவர் மாநிலத்தில் வசிக்கும் தமிழ்மக்களிடம் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் வன்கூவர், வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியில் வைத்து ஆர்.சி.எம்.பி. பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட மேற்படி புலி உறுப்பினர். வன்கூவர் பகுதியில் வாழும் தமிழ் மக்களிடம் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டு பிரபாகரன் தம்பித்துரை மீதான விசாரணைகளை நீதிமன்ற அனுமதியுடன் ஆர்.சி.எம்.பி. பொலிஸார் தொடுத்தனர். இவரது குற்றங்கள் குறித்து ஆதாரங்களை திரட்டுவதில் ஈடுபட்ட பொலிஸார் அதில் வெற்றி கண்டுள்ளனர். இறுதியில் தனது குற்றங்களில் இருந்து தப்பமுடியாது என்று கருதிய பிரபாகரன் தம்பித்துரை தனது குற்றத்தை தானே ஏற்றுக்கொண்டு குற்றவாளி என்பதை ஏற்றுகொண்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்படி புலி உறுப்பினர் மீதான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட போதும் அனை ஏற்க மறுத்து, தான் மனிதாபிமான உதவிக்காகவே நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துவந்த தம்பித்துரை பிரபாகரன் இறுதியில் தான் சேகரித்த பணத்தில் அரைவாசியை புலிகளின் செயற்பாடுகளுக்காக வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள மேற்படி நபருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவருகின்றபோதும், அவரது சட்டத்தரணி தனது தரப்பு நபருக்கு கண்டிப்புடன் கூடிய மூன்று ஆண்டுகள் தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளபோதும், இவருக்கான தண்டனையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு காலமும் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டபோதும் அவர்கள் அவற்றில் இருந்து தப்பித்து கொண்டபோதும், பிரபாகரன் தம்பித்துரையே முதன் முதலாக கனடாவில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையை அனுபவிக்கவுள்ள புலி உறுப்பினர் ஆவர். மேலும் பல நிதி சேகரிப்பாளர்கள், புலிகளின் முதலீட்டில் வர்த்தகம் செய்வோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டனையை எதிர்நோக்கலாம் என்று கனேடிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply