மன்னாரில் மீண்டும் ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸாரும் ,படையினரும்

மன்னாரில் இடம் பெற்று வரும் கொள்ளை , கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு  வருகின்றனர். நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் ஏiனைய பகுதிகள் உள்ளடங்களாக இடம் பெற்று வரும் கொலை கொள்ளை, கப்பம் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலங்களாக மன்னார் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறான சம்பவங்களினால் மன்னார் நகரில் வழமைக்கு மாறான அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் இடம் பெற்று வந்த காலப்பகுதிகளைக்காட்டிலும் தற்போது மன்னார் நகரில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதனால் அவற்றைக்ககட்டுப்படுத்த வேண்டியநிலை தற்போது எழுந்திருக்கும் நிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மீண்டும் தமது ரோந்து நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் ரோந்து நடவடிக்கைகள், திடீர் சோதனை நடவடிக்கைகள, நகரிற்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் நபர்கள் ,வாகனங்கள் என்பனவற்றின் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டமையே தற்போது இடம் பெற்று வரும் குற்றச்செயல்களுக்கான காரணங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது மன்னார் நகரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான இருபத்து நான்கு மணிநேர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் நகரிற்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது.

இதனால் பொதுமக்களின் நடமாட்டம் இரவு, பகலாக இடம்பெற்றுவரும் நிலையில் மன்னார் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிட வளாகங்களில் தொடரும் கும் இருட்டின் மத்தியில் சட்டவிரோத, சமூகவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறத்தொடங்கியிருக்கின்றது.

இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் மன்னார் நகரப்பொலிஸாரும் ,இராணுவத்தினரும் பகல் மற்றும் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இரவு வேளைகளில் தேவையற்ற விதமாக நடமாடித்திரியும் இளைஞர் குழுக்களையும் சந்தேகத்திற்கிடமானவர்களையும் விசாரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply