மக்கள் நலனில் அக்கறை கொண்டோரே எமக்குத் தேவை : தயாசிறி

பின்தங்கிய மக்களுக்காக சேவையாற்றுவதற்கு கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது என்றும் பதவி மோகமுடையவர்களை விட மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கே கட்சியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஐக்கியத் தேசியக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு கட்சித் தலைமையத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் கட்சியின் எதிர்கால நலன் கருதி காத்திரமான செயற்திட்டங்களும் மாற்றங்களும் கொண்டுவரப்பட வேண்டும் என சிரேஷ்ட அரசியல் பிரமுகர்களும் மக்களும் விரும்புகின்றனர். யாரைத் தலைவராக நியமிப்பது மற்றும் பிரதான பதவிகளில் யாரை அமர்த்துவது தொடர்பில் எமது கட்சி மீளாய்வுக் குழு ஆராய்ந்து வருகிறது.

நாம் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும். எமது கட்சியின் கொள்கைகளில் இதுவும் ஒன்று. பதவி மோகத்துடன் கட்சிக்குள் வருபவர்களை விட மக்களின் நலனில் முழுமையாக அக்கறை கொண்டு செயற்படுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்” என்றார். “எதிர்வரும் ஜூலை மாதத்தில் எமது மீளாய்வுக் குழு தயாரித்த கட்சி மறுசீரமைப்புக் கோவை கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் எமது பயணத்தில் சிறந்ததொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply