திருகோணமலை-முல்லைத்தீவு பிரதான வீதி புனரமைப்பக்கப்படுகிறது: இராணுவம்

முல்லைத்தீவு மாவட்டம் அலம்பில் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து திருகோணமலை-முல்லைத்தீவு வீதியைப் புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திருகோணமலை-முல்லைத்தீவு பிரதான வீதியில் பழுதடைந்திருக்கும் பாலங்களைத் திருத்தும் பணிகளை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு ஆரம்பித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பெரும்பாலும் மீனவர்களால் பயன்படுத்தப்படும் நாயாறு களப்பின் ஊடாகச் செல்லும் திருகோணமலை-முல்லைத்தீவு இரண்டு இடங்களில் சேதப்பட்டிருந்ததாகவும், அலம்பிலை இராணுவத்தினர் கடந்த 4ஆம் திகதி கைப்பற்றியதன் பின்னர் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சேதப்படுத்தப்பட்ட இரண்டு பாலங்களில் ஒன்றைப் புனரமைப்பும் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருவதுடன், மற்றையதன் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்” என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply