மோசமான காலநிலை காரணமாக யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒத்தி வைப்பு
மோசமான காலநிலை காரணமாக யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை காலி முகத்திடலில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மோசமான காலநிலை காரணமாக இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகளை ஒத்தி வைப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் தலைவர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 20ம் திகதி வியாழக்கிழமை யுத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் காலையிலும் மாலையிலும் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது நாட்டில் நிலவி வரும் காலநிலையை கருத்திற் கொண்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதகாவும், புதிய திகதிகள் விரைவில் அறிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்த வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் அரசாங்க நிறுவனங்களில் தேசியக் கொடி பறக்கப்படவிப்பட்டுள்ளது. சகல தனியார் நிறுவனங்களிலும் வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தாய்நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து படைவீரர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது சகலரதும் கடமையாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply