யுத்த வெற்றியின் போது ஜெனரல் சரத்தை சிறையில் வைத்திருப்பதா? : ரணில்

அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடும் இவ்வேளை, நாட்டுக்காகப் போராடிய ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? என்று ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை, நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் வரிவிதிப்புக்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையுயர்வு என்பன, அது பெற்றுள்ள கடனை அடைப்பதற்காகவே. அத்துடன் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும் மக்கள் இதுவரை கோழிக்கூண்டுக்குள்ளே அடைக்கப்பட்டு அகதிகளாகவே இருக்கிறார்கள்.

இவ்வேளை, அரசாங்கத்தின் யுத்த வெற்றி தேவைதானா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தின் கொள்கைத்திட்டம் என்ன எனவும் அவர் கேட்டார். ரணில் எழுப்பிய இத்தகைய கேள்விகளால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply