495 புலி சந்தேக நபர்கள் இன்று விடுதலை

72 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 495 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் பெற்றோர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மேற்படி போராளிகள் கையளிக்கப்பட்டனர். வவுனியா, கைதடி, வெலிகந்த, ரத்மலான உள்ளிட்ட இடங்களிலிருந்த 495 முன்னாள் போராளிகளே விடுவிக்ப்பட்டுள்ளனர். இவற்றில் 72 பல்கலைகழக மாணவர்களும், 110 ஆண் மாணவர்கள், 88 பெண் மாணவிகள் உள்ளிட்ட 198 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர். பாடசாலை மாணவர்கள் அனைவரும் தற்போது ரத்மலான இந்துக் கல்லூரியில் கல்வி பயில்கின்றனர்.

இதனைத் தவிர விடுவிக்கப்பட்டவர்களில் 100 சாரதிகளும் அடங்குவர். மேற்படி நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் மகிந்த கத்துருசிங்க, பாரம்பரிய சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.விக்கினராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ், யாழ்ப்பாணப் பல்கலைகழக வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ஏ.தேவராஜா, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply