மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சர் இன்று பதவியேற்பு
இன்று பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலத்தில் தனது கடமைகளை அனூசியா சிவராசா பொறுப்பேற்றார். இ.தொ.காவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் தம்மீது அபரிமித நம்பிக்கை வைத்தே மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சை தன்னிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கை வீண் போகாதவாறு தான் நடந்து கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
பேராதனையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று மு.ப. 11.00 மணியளவில் தமது பொறுப்புக்களை ஏற்ற பின் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, மாகாண அமைச்சர் சுனில் அமரதுங்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply