பயங்கரவாதத்திலிருந்து நாட்டை காக்கும் பொறுப்பு படையினரிடம்

பயங்கரவாதத்திற்கு எதிராக படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதா கவும் இது குறிப்பிட்ட ஒரு குழுவின் அரசியல் தேவையினைப் பூர்த்திசெய்வதற் காக அல்ல எனவும் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் கடமை படையினரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக் குடனான தீர்மானத்தை இராணுவம் எடு த்திருக்குமானால் மேலும் கூடுதலான இரா ணுவ வீரர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிஸ்னஸ் டுடே சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளினால் கடைப் பிடிக்கப்படும் புரிந்துணர்வுடனான இராணுவ இலக்குகள் காரணமாக பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தம் வெற்றிகரமாக முன் னெடுக்கப்படுகிறது.

எந்த தரங்களில் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்திற்கொள்ளாது யுத்தக் களத்தில் வீரத்தைக் காண்பித்த இராணுவ வீரர்களு க்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கி நாம் சில நடைமுறைகளில் மாற்றம் ஏற் படுத்தியுள்ளதாகவும் அவர் இந்தப் பேட் டியில் தெரிவித்துள்ளார். இதுவரை ஐம்பது புதிய படையணிகள் ஏற்படு த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஒரு தேசிய பாதுகாப்புத் திட்டம் அவசியமென்றும் இத்த கைய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு வலுவான அரசியல் தலைமைத்துவம் அவசியமென்று ஜெனரல் பொன்சேகா கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினரோடு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற வர்கள் தாம் முன்னர் 2002ம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பாரதூரமான விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply