800 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சமூகத்துடன் மீள இணைக்க நடவடிக்கை

சுமார் எண்ணாயிரம் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சமூகத்துடன் மீள இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படிமுறையான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று புனர்வாழ்வுத்துறை ஆனையாபளர் நாயகம் சுதந்திர ரணசிங்க நிருபர்களுக்கு கூறியுள்ளதாக சிங்குவா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
அவர்களுக்கு நாம் தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம். தகவல் தொழிநுட்பக் கல்வி மற்றும் ஆங்கிலக் கல்வி ஆகியவற்றையும் கற்பித்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 2009 மேயில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து சுமார் 11 ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டது. இவர்களில் மூவாயிரம் பேர் தீவிரமான புலி உறுப்பினர்கள் என்றும் அவர்களை இப்பொழுதுக்கு விடுதலை செய்வது நாட்டுக்கு பாதுகாப்பானது அல்ல என்றும் புனர்வாழ்வுத் துறை ஆணையாளர் தெரிவிக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply