யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நிச்சயமாக நடைபெறும் : கெஹலிய
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நிச்சயமாக நடைபெறும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் ஏனைய நிகழ்வுகள் காலநிலை வழமைக்கு திரும்பியதன் பின்னர் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்ட பேரணி கடந்த 20ம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்தது. எனினும் நாட்டில் நிலவிய மோசமான காலநிலையினால் இந்த கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
எந்த காரணத்திற்காகவும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் கைவிடப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவு குறித்து அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து படைவீரர்களை ஏளனம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply