மலேசிய வீசா நடைமுறைகளில் தளர்வு

மலேசிய அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட வீசா சட்டக் கெடுபிடிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான வீசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நாடுகளிலிருந்து செல்லும் பயணிகள் ட்ரான்சிஸ்ட் வீசாக்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மலேசியா அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மலேசியா இந்த வீசா தளர்வு நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் மலேசியா செல்லும் இலங்கைப் பிரஜைகள் ட்ரான்சிஸ்ட் வீசாக்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply