இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது
இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்கா முழுமையாக தளர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு நீண்ட காலமாக யுத்தம் நிலவி வந்த இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து ஓராண்டு பூர்த்தியான நிலையில் அமெரிக்க இந்த பயண எச்சரிக்கை தளர்வினை அறிவித்துள்ளது.
புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் தலைநகர் கொழும்பிலோ அல்லது வேறும் பிரதேசங்களிலோ புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாளைய தினம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply