யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற பெண் ஒருவர் இலங்கை காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் இவர் முன்மையான பாத்திரத்தை வகித்ததாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply