ஐநா சந்திப்பு புறக்கணிப்பு : பீரிஸிடம் விளக்கம் கோரி இன்னர் சிற்றி கடிதம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று முன் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தமை தொடர்பில், அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையான இன்னர் சிற்றி பிரஸ், இலங்கை தூதரகத்திற்கு மேற்படி விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச் சாட்டுகளுக்கான விளக்கங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் கோரியுள்ளது. அதேவேளை, அண்மையில் பான் கீ மூனுக்கும் ஜீ.எல்.பீரிஸிக்கும் இடையிலான சந்திப்பின் போது, இன்னர் சிற்றி பிரஸ் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும் இதன் போது புகைப்படம் எடுக்கவோ, கலந்து கொள்ளவோ இன்னர் சிற்றி பிரஸுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply