“நல்லிணக்க ஆணையத்துக்கு அமெரிக்கா ஆதரவு”
இலங்கயில் யுத்தத்துக்கு பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் தன்னளவில் ஏற்படுத்தியுள்ள ஆணையத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையில் உள்நாட்டளவில் ஆணையம் அமைக்கப்படுதற்கு தான் ஆதரவு தருவதாகக் கூறியுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர். ஆனால் இலங்கையில் யுத்தத்தின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply