கண்டியில் இந்திய விசா முகவர் நிலையம் திறப்பு : நாளை முதல் செயற்பாடு

இந்திய நாட்டுக்கான விசா விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கவும் அதற்கான விசாக்களை பெற்றுக் கொடுக்கவுமான முகவர் காரியாலயமொன்று இன்று முதல் கண்டி இல701/ஏ , பேராதனை வீதி, கிங்ஸ்வூட் கல்லூரிக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. கண்டியில் பேராதனை வீதியில் செயற்படவுள்ள காரியாலயத்திற்கான விசேட வைபவமொன்று நேற்றுக் காலை 10 மணியளவில் கண்டி ஹில்டன் ஹோட்டலில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டிக்கிறி கொப்பேகடுவ, சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை முதலாந் திகதி ஆரம்பமாகும் இத்தூதரகம் திங்கள் முதல் வெள்ளி வரை செயற்படும். இந்திய பயணிகள் இக்காரியாலயத்தில் விசா விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, விசாக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய தூதராலயத்தின் உதவியோடு ஏற்கனவே கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இம்முகவர் நிலையம் செயற்பட்டு வருகிறது. மேலும் அம்பாறை மாவட்டத்திலும் இந்நிலையம் திறக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply