அபிவிருத்தி, பராமரிப்புத் துறைகளில் முறையான பராமரிப்பு அவசியம்

அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் முறையான வேலைத் திட்டம் அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவலியுறுத்தியுள்ளார்.அபிவிருத்தி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தளவு பெருந்தொகை நிதியை செலவிட்டாலும் முறையான பராமரிப்பு இல்லையென்றால் அது அழிவை நோக்கியே பயணிக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் மஹமேவ்னா பூங்காவின் துரித அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. மேற்படி புனித பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அதன் முக்கியத்துவத்தைப் பாது காப்பதில் முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘உறும அருண’ செயற்திட்டத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வரலாற்று முக்கியத்துவம், புராதன முக்கியத்து வம் வாய்ந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்து பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அநுராதபுரம் ‘தவுகன’ புனித பிரதேசம், கெப் பித்திக்கொல்லாவ’ கல்லில்லவெடிய ஆரண்ய சேனநாயக்க’ புனித பிரதேசம் ஆகியனவற்றின் அபி விருத்திப் பணிகள் நிறைவடைந் துள்ளன. இதன் பராமரிப்புக்காக பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புச் செயலணி இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வரலாற்று முக்கியத்துவம், புராதன முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கான 20 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள் ளமை தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், பவித்ரா வன்னியாரச்சி, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க, பிரதியமைச்சர் எம். கே. பீ. எஸ். குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply