கொழும்பு-கட்டுநாயக்கா சொகுசு ரயில் : வெளிநாட்டவர் ஆர்வம்
கட்டுநாயக்க முதல் கொழும்புவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சொகுசு ரயில் சேவையில் வெளிநாட்டவர்கள் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டிவருவதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா நாளை ஆரம்பமாகவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் இலங்கை வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் தாம் புதிய ரயிலில் பயணிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ரயிலில் மேலதிக வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக போக்குவரத்துச் சபையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பாளர் சுமணசிறி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply