யுத்தத்தை வென்ற போதும், சமாதானம் நிலைநாட்டப்படவில்லை: சந்திரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வென்றெடுக்கப்பட்டுள்ள போதிலும், சமாதானம் நிலைநாட்டப் படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் ஏனையவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எவ்வித முனைப்பும் எடுக்கப்படாமை வருத்தமளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாடு மற்றையவர்களுக்கும் உரித்தானது, இந்தத் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக மற்றையவர்களும் பாடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒர் நிலைமையில் ஏனையவர்களை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சகல மக்களும் ஒரே விதமாக நோக்கப்பட வேண்டும் எனவும், அனைவரினது உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி என்ற கேக் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு உண்ண வேண்டியது எனவும், தனித்து உண்ணக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற போதிலும், அரசியல்வாதிகள் தம்முடன் பேசுவதற்கு அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மேடம் தற்போதைய நிலைமை தெரியுந்தானே” என கட்சி உறுப்பினர்கள் தம்முடன் பேசாது, நழுவிச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply