காங்கேசன்துறை துறைமுகத்துக்குப் பணியாளர்கள் அனுமதி
காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் பொருள்களை ஏற்றி இறக்கும் பணிகளுக்காக பணியாளர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துகின்ற நிமல்லவ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுடன், மற்றுமொரு சரக்குக் கப்பலான றுகுணு கப்பல் சேதமடைந்திருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் பொருள்களை ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெல்லிப்பழை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை இரண்டு துறைமுகங்களுக்குமான பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கப்பல்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஈ.பி.டி.பி.யின் அழைப்பின் பேரில் நேற்று வியாழக்கிழமை யாழ் குடாநாட்டில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை குடாநாட்டின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply