இலங்கைக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளியோம்: பிரித்தானிய
இலங்கைக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் இடமளிக்காது என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்னவிற்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டொக்டர் பீட்டர் ஹெய்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா இடமளிக்காது என அவர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு பிரித்தானியா அளித்து வரும் ஒத்துழைப்பு அளப்பரியது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply