IIFA: இந்திய திரைப்பட விழா: கொழும்பில் இன்று கண்கவர் நிகழ்வு

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இறுதி நாள் வைபவம் இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகிறது.இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் திரைப்பட விருதுகள் வழங்கப் படுவதோடு கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விவேக் ஒபரோய், விபாசா பாசு, தியாமிர்ஸா உட்பட நட்சத்திர பிரபலங்கள் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.லாரா தத்தா, பூமன் இராணி, ரித்தீஸ் தேஷ்முக் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர்.சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் ஐபா சர்வதேச வர்த்தக சம்மேளன மாநாட்டுடன் நேற்று ஆரம்பமானது. இம்மாநாடு நேற்றுக் காலை 9 மணியளவில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்த இம்மாநாட்டில், இந்தியத் தூதுவர் அசோக் காந்தா, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் ஆகியோர் உட்பட இந்திய மற்றும் இலங்கையின் வர்த்தகத் துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் பலர் உரையாற்றினர்.

இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான அனுபம் கீன், ஜனாதிபதியினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதேபோல யுத்தத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஒரு நாட்டில் விளையாட்டுத்துறையை குறிப்பாக கிரிக்கெட்டை அனைவரையும் ஈர்க்கும் துறையாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலொன் றும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் இந்திய நடிகை தியா மிர்ஸா, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, அஜய் ஜடேஜா உட்பட சிலர் கலந்து கொண்டனர். இதற் கிடையில், சிலோன் கொண்டினென்ட் ஹோட்டலில் சினிமா பயிற்சிப்பட்டறையொன் றும் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை இடம்பெற்றது.

மதியம் 1 மணிக்கு, இலங்கை அணி வீரர்களுக்கும் இந்தியத் திரை நட்சத்திரங்களுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெற்றது. சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் பவுன் ஷோவின் இரண்டாம் கட்டம் நேற்று காலை சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply