இலங்கைத் தமிழ் அகதியென இந்திய இளைஞர் ஒருவர் நாடகம்

இலங்கைத் தமிழ் அகதி என்று பொய் சொல்லி பெல்ஜியத்தில் தங்கி இருந்த இந்திய இளைஞர் ஒருவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். முறையான ஆவணங்கள் எவையும் இன்றி பெல்ஜியன் சென்ற குறித்த நபர் அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளுக்கு அவரை ஒரு இலங்கைத் தமிழ் அகதி என்று பொய் சொல்லி இருகிறார். அதையடுத்துக் குடிவரவு அதிகாரிகள் அவரை இலங்கையர்களுக்கான அகதி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் மேலதிக விசாரணைகளின் போது குறித்த நபர் இலங்கையர் அல்லர், இந்தியர் என்று கண்டு பிடிக்க்கப்பட்டது. அவர் உடனடியாக நாடு கடத்தப்பட்டார்.

பெல்ஜியம் நாட்டில் இருந்து சென்னை மீனம்பாக்கம் வந்த, விமானத்தில் அவர் நேற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து தமிழ்நாடு பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்று தெரிய வந்தது. பெல்ஜியம் நாட்டில் இருந்து சென்னை மீனம்பாக்கம் வந்த, விமானத்தில் வந்த அறிவழகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், முறையான ஆவணங்கள் இன்றி பெல்ஜியம் சென்றதால் அந்த நாட்டு அதிகாரிகள் அவரை அங்கிருந்து திருப்பி அனுப்பிதும் தெரிய வந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply