அரசியல் தீர்வை உடன் நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தல்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விஷேட பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் அரசியலுரிமை மற்றும் உடனடி பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தமிழர் தரப்பின் பிரதான சக்திகளோடு அரசியல் தீர்வு குறித்து பேசுதல் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நேற்று மாலை 5 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தியில் ஈடுபட்டிருந்ததோடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்திருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் தெளிவாக கேட்டறிந்துள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதோடு அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப்படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமவுரிமையும் உள்ளதான அரசியல் ஏற்பாடு நோக்கி செல்வதே தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்த நடை முறைச்சாத்தியமான வழி முறை என்றும், அதை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட பிரதிநிதிகளால் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்திருந்த சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்தியிருக்காத தமிழ் தலைமைகளின் தவறான வழிநடத்தலுக்காக தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தை ஒரு போதும் பின்தள்ளி விடவேண்டாம் என்றும், அனைத்து தரப்பாலும் ஏற்க முடிந்த நடை முறைச்சாத்தியமான யோசனைகளையே தாம் முன்வைத்து வருவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்த ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் உறவுக்கு கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்தனர்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம், மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும், அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், கைது செய்யப்பட்டோர், மற்றும் சரணடைந்திருப்போர்களை விடுதலை செய்தல், அவ்வாறு விடுதலை செய்யப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாக அவர்களுக்கான தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்பு, மற்றும், அவர்களுக்கான கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற மனிதாபிமான பணிகளையும் அரசியல் தீர்வு முயற்கிகளை நடைமுறைப்படுத்தும் ஏக காலத்தில் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பினிரால் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன், நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி, அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply