மகிந்த இருந்திருந்தால் கறுப்பு ஜுலை நடந்திருக்காது – கருணா
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்திருந்தால் கறுப்பு ஜுலை என்று வர்ணிக்கப்படும் 1983ம் ஆண்டுக் கலவரம் நடைபெற்றிருக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்துள்ளார்.
400 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
1983ம் ஆண்டு ஜுலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அப்போது இருந்திருந்தால் கறுப்பு ஜுலை எனப்படும் இந்தக் கலவரம் நடைபெற்றிருக்காது. அவர் அப்போதே பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியிருப்பார்” என்று கருணா தனதுரையில் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் விடயத்தில் சிறப்பாகச் செயற்பட்டுவருவதாகப் பாராட்டிய கருணா, அதேநேரம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலும் அவர் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அதிக காலம் வடக்கில் வசித்திருக்கிறேன். அங்குள்ள மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, விரைவில் அந்தப் பகுதி மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களும் தென்பகுதி மக்கள் போல் சுதந்திரமாக வாழவேண்டும்” என்றார் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன்.
விளையாட்டின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் இணைக்க முடியும் என்று இங்கு குறிப்பிட்ட அவர், தான் வெளிநாடுகளுக்குச் சென்றபோது தன்னை இலங்கை கிரிக்கட் வீரர் முரளீதரனா என்று விமானநிலையங்களில் கேட்டதுண்டு என்று தெரிவித்தார்.
அப்போதெல்லாம் நான் பெருமையுடன் அந்த விமானநிலையங்களைக் கடப்பதுண்டு” என்றார் அவர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply