அரசியல் தீர்வு புலிகளைப் பலவீனப்படுத்தும்: அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான ‘ஆம் எம்மால் முடியும்’ என்பதை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார்.
இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார்.
வன்னியில் அடைபட்டிருக்கும் 230,000 மக்கள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்;திலேயே சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்வதற்கு அரசியல் தீPர்வு உதவியாகவிருக்கும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேவையற்றது என சிலர் வாதாடுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடக்கமுடியாவிட்டாலும், அனைத்து சமூகமும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றார் பிளேக்.
உடனடியாக அரசியல் தீPர்வொன்றுக்குச் சென்றால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டுவிடும் எனவும், அவர்களுக்கான ஆதரவு நீக்கப்பட்டுவிடும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கடத்தல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் பாரியளவில் நடக்கின்றன. இதில் குறிப்பாகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலிருந்து வெளியே வருவதற்கு அமெரிக்கா தன்னாலானதைச் செய்யும்” என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார்.
மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அமெரிக்க கடந்த காலங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply