இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொது மன்னிப்பு
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் ஒர் பொது மன்னிப்புக் காலத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இராணுவத்திலிருந்து தப்பியோடிய அல்லது முறையாக பதவி விலகாத அனைவரும் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக உத்தியோகபூர்வமாக பதவி விலக முடியும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் இராணுவ ஆவணங்களுடன் பனாகொடை இராணுவ முகாமிற்குச் சென்று, உத்தியோகபூர்வமாக பதவி விலக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply