இலங்கை விடுத்த அழைப்பினை இந்தியா ஏற்றது
இந்தியாவின் பிரதான இரு கட்சிகளின் தமிழ்நாட்டைப் பிரதி நித்துவப்படுத்தும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வர உள்ளனர். இலங்கை வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பினை ஏற்றே இவர்கள் இங்கு வரவுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகளைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு இலங்கை ஜனாதிபதியின் அழைப்பைப் பெற்றவர்களாவர்.
இலங்கை வந்து வடக்குப் பகுதிக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலமைகளை அவதானித்துப் பாருங்கள் என ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களில் இலங்கை வந்து வடக்குப் பகுதிக்குச் செல்லவுள்ளதாக இலங்கை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்து அறிக்கை விட்ட ஒருசில உறுப்பினர்களும் அடங்குகின்றனர் எனத் தெரியவருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply