நோர்வேயில் ஏற்பட்ட மோதல் தனிப்பட்ட சம்பவம் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது
நோர்வேயில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கு நோர்வேயில் உள்ள தமிழர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனிப்பட்ட காரணத்திற்காக இடம்பெற்றுள்ளதாக நோர்வே தூதரகம் விடுத்துள்ள அறிக்கை யொன்றில் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி இரவு உணவகமொன்றில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை யொன்றை அடுத்து, அந்த உணவகத்திற்கு அருகில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் சிற்றுழியர் ஒருவரும் நோர்வே சென்றிருந்த முஸ்லீம் நபர் ஒருவரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மோதல்கள் குறித்து பொய்யான பல தகவல்கள் பரவியுள்ள போதிலும் தனிப்பட்ட விடயமே இந்த மோதலுக்கான காரணம் என இலங்கை தூதரகம் கூறியுள்ளது. இந்த சம்பவத்தினால் இலங்கை தூதரகத்திற்கோ, தூதரக அதிகாரிகளுகோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து ஓஸ்லோ காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply