இலங்கை அபிவிருத்திக்குத் தொடர்ந்தும் உதவி : அகாசி
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு நீண்டகால பிணைப்பைக் கொண்டது எனத் தெரிவித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாசி, இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவவுள்ளதாகக் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அகாசி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையின் மனித அபிவிருத்தி, சுயதொழில் ஊக்குவிப்பு, சிறுகைத்தொழில் அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கு 39 பில்லியன் ஜப்பானிய யென்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் ஜப்பான் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. அதனைக் கருத்திற்கொண்டு நாம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிசெய்கிறோம். தற்போது நாட்டின் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணப்படுகிறது” என்றார். அரசியல் பிரச்சினைகள் குறித்து சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டில் இல்லாத காரணத்தினால் ஏனைய உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply