தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நான்கு தமிழர்கள் நெதர்லாந்தில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நான்கு தமிழர்களை நெதர்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் அந்நாட்டு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்தின் பிரெடா, ரொட்டர்டாம், ஹீம்ஸ்கிர்க் மற்றும் ஹீர்லீன் ஆகிய பகுதிகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நெதர்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் விடுதலைப் புலி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அதிகாரிகள், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
புலிகளுடன் தொடர்புடைய சந்தேதக்தின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் ஏழு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமான அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply