புலிகளின் நாடுகடந்த திட்டத்தை முறியடிக்க சர்வதேசத்தை அணிதிரட்டி உதவ வேண்டும் பிரதமர் அகாஸியிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிப்ழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்தை உருவா க்க திட்டம் தீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அவ்வாறான நாடுகள் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்தவொரு அரசுக்கும் எதிராக இலங்கையில் இருந்து செயற்பட நாம் எந்தவொரு குழுவுக்கும் இடளிக்க வில்லை. அதேபோல் இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாட்டிலும் திட்டம் தீட்டப்படுமாயின் அதனை முறியடிப்பது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் பிர தமர் கூறினார்.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளிலும் இந்த நிழல் அரசை உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளதாக தெரிய வந்துள்ளது. அடிப்படிப் பார்ர்க்கும்போது அவ்வாறான நாடுகள் இலங்கைக்கு எதிராக வஞ்சக நோக்குடன் செயற்படுகின்றனவா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பிரதமர் அகாஷி யிடம் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தெற்கைப் போலவே வடக்கிலும் துரித அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கு அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத் தியுள்ளது. அவை தொடர்பாக அனைத்து இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையும் நட்புறவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்று பிரதமர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் புலிகளின் நிழல் அரசொன்று உருவாகுவதற்கான ஏதாவது பின்னணிகள் இருக்குமாயின் அதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக ஜப்பான் மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது என பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply