ஜனாதிபதி – யசூசி அகாசி சந்திப்பு
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் இடையில் இன்று ஜனதிபதி மாளிகையில் முற்பகல் 11.30 மணிக்கு விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்குமிடையிலான சந்திப்பில் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பன குறித்து அகாசி ஜனாதிபதிக்கு வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply