மீண்டும் உலக உணவுத் திட்டத்தின் அலுவலகம் கிளிநொச்சியில்
ஐ.நா உலக உணவுத் திட்டம் இரு வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அதன் அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது. கடந்த கால யுத்தத்தில் 2008 ஆம் ஆண்டு இக்கிளிநொச்சி அலுவலகம் அழிந்திருந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்துக்குப் பின் இன்று இவ்வலுவலகம் மீளத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பணியாற்ற தற்போது நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நாவின் கீழ் இயங்கும் ஏனைய ஸ்தாபனங்களில் இருந்து பணியாளர்கள் இந்த அலுவலகத்துக்கு பணியாளர்களைஉள்வாங்கி இதன் சேவைகளை விஸ்தரிக்க திட்டம் இடப்பட்டடுள்ளது.
இந்த அலுவலுவலகம் யுத்த நாட்களில் இயங்காதபோதும்கூட அதன் சேவைகள் மக்களுக்குதொடர்ச்சியாக வழங்கப்பட்டுவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply