பரந்தன் மீது இன்று காலை ஏழு தடவைகள் விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சி தெற்கின் பரந்தன் மேற்குப் பகுதியிலுள்ள புலிகளின் இனம்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் இன்று  காலையில் ஏழு தடவைகள் தாக்குதலை நடத்தியதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியை நோக்கி முன்னேறிச் செல்லும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பல இடங்களில் பாரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று  தெரிவித்தது.

நேற்று இடம்பெற்ற இந்த மோதல்களின் போது புலிகள் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அந்த நிலையம் கூறியது. அக்கராயன்குளம் வடக்கு,அடம்பன், நெவில் ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும்,முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு வடக்கு, குமுளமுனை, கஜபாபுர, முல்லியாவளை, துண்டன்கேணி, கெட்டிக் குளம், ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெற்ற மோதல்களின் போது புலிகள் தரப்பில் பாரிய இழப்ப ஏற்றபட்டதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply