முல்லை மாவட்டத்தில் விரைவில் ஆறு பொலிஸ் நிலையங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற் படுத்தும் வகையில் ஆறு பொலிஸ் நிலையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ஷ அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்த பின்னர் இதற்கான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரியவிற்கு வழங்கியதாக முல்லைத் தீவு பாதுகாப்புப் படைகளின் கட் டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களின் மேம்பாடு, மீள்குடியேற்றம் மற்றும் தற் போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முல்லைத்தீவு பாது காப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா கொழும்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளி த்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஊடகவியலாளர் களுடனான இந்த சந்திப்பு இடம் பெற்றது. இங்கு அவர் மேலும் குறிப்பிடு கையில்:-முல்லைத்தீவில் இராணுவத்தின் 59வது படைப் பிரிவின் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply