வடக்கு கிழக்கு மாகாணங்களின் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு கோத்தபாய உத்தரவு
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்புக்காக புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த பிரதேசங்களில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் ஏதேனும் குழுக்கள் செயற்பட்டால், அவற்றின் பெயர்கள் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிதல், காடுகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா என்பதை கண்டறித்து, சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்தல் போன்ற முக்கிய பணிகளை புலனாய்வு குழுக்களுக்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகள் கடந்தகாலங்களில் ஆயுத விநியோக மார்க்கங்களாக பயன்படுத்திய,கடல் பகுதிகள் மற்றும் பாதைகளை தொடர்ந்தும் உன்னிப்பாக கண்காணிக்குமாறும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஆலோசனை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply