ஐநா நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு பிரான்ஸ் வரவேற்பளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்தவுடன் யுத்த மீறல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதன்படி, அண்மையில் ஜனாதிபதி நியமித்துள்ள மாண்புமிக்கோர் குழுவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இது தொடர்பில் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றசாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், தொடர்பான விசாரணைகள், இடைநடுவில் நின்றுவிடக் கூடாது. எனவே இதனை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே, இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான வாழ்கைச் சூழல் நிலவ முடியும் என பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply