ஜனாதிபதி, பிரதமர், இந்திய கடற்படை தளபதி இன்று சந்திப்பு

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி தலைமையிலான உயர் மட்டக்குழுவினருக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்திய கடற்படைத் தளபதியின் வருகையை முன்னிட்டு இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.டெல்ஹி என்ற கப்பலும் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினதும், கடற்படைத் தளபதியினதும் விசேட அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென ரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை இந்திய கடற்படைத் தளபதி இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply